டெல்லி சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம் : விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததற்கு தலைவர்கள் கண்டனம்

Nov 26 2020 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்துவதற்காக டெல்லியை நோக்கி வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியதற்கு, தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை - அவற்றை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது நியாயமற்றது என பதிவிட்டுள்ளார். அமைதியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவர்களின் அரசியலமைப்பு உரிமை எனத் தெரிவித்துள்ள திரு.கெஜ்ரிவால், விவசாயிகளை இவ்வாறு நடத்துவது முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பா.ஜ.க. அரசு விவசாயிகளில் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக, இந்த குளிர்காலத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி செய்துவிட்டு, விவசாயிகளிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டுள்ளதாக திருமதி.பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00