தென்கர்நாடகத்தில் ஒருசில இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு - பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 26 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கர்நாடகத்தில் ஒருசில இடங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்லாரி, பெங்களூரு நகரம், சிக்கபளாப்பூா், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகம், மற்றும் வடகர்நாடகத்தின் உள்பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.