வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000-க்கு விற்கப்படும் - சீரம் இந்தியா நிறுவனம் தகவல்

Jan 12 2021 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. சீரம் நிறுவனம் முதற்கட்டமாக, கோவிஷீல்டு தடுப்பூசிகளை டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.அதர் பூனவல்லா, மத்திய அரசு கோரிக்கைப்படி, முதல் பத்து கோடி தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே 200 ரூபாய் விலைக்கு வழங்கப்படும் என்றும், அடுத்தகட்டமாக வெளிச்சந்தையில் தலா ஆயிரம் ரூபாய்க்கு தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிதார். மாதந்தோறும் 7 முதல் 8 கோடி டோஸ்களை தாங்கள் தயாரிப்பதாகவும், வெளிநாடுகளுக்கு எவ்வளவு டோஸ்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் திரு.அதர் பூனவல்லா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00