போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன், 10 நாட்களுக்குள், முதல் கூட்டத்தை நடத்த வேண்டும் - 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
Jan 12 2021 7:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. வேளாண் சட்ட இடைக்காலத் தடை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன், 10 நாட்களுக்குள், முதல் கூட்டத்தை நடத்த அக்குழு நடத்தி முடிப்பதுடன், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதை விவசாயிகள் வெற்றியாகக் கருத வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாயிகளை சங்கத்தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.