ராணுவ விமானப் படைப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க மத்திய அரசு முடிவு - விமானம் ஓட்டும் பயிற்சி ஜூலையில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு
Jan 13 2021 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில், பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் திரு. எம்.எம்.நரவனே, ராணுவ விமானப் பிரிவின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில், பெண்கள் ஏற்கனவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதைத்தொடர்ந்து, பெண் அதிகாரிகளை விமானிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் அதிகாரிகளுக்கான விமானம் ஓட்டும் பயிற்சி, வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.