வெளிச்சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் - சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தகவல்
Jan 13 2021 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. சீரம் நிறுவனம் முதற்கட்டமாக, கோவிஷீல்டு தடுப்பூசிகளை டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.அதர் பூனவல்லா, மத்திய அரசு கோரிக்கைப்படி, முதல் பத்து கோடி தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே 200 ரூபாய் விலைக்கு வழங்கப்படும் என்றும், அடுத்தகட்டமாக வெளிச்சந்தையில் தலா ஆயிரம் ரூபாய்க்கு தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதந்தோறும் 7 முதல் 8 கோடி டோஸ்களை தாங்கள் தயாரிப்பதாகவும், வெளிநாடுகளுக்கு எவ்வளவு டோஸ்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் திரு.அதர் பூனவல்லா தெரிவித்தார்.