நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தை கையிலெடுக்க திட்டம் - எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கா‍ங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் ஆலோசனை

Jan 13 2021 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்த, ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, காங்கிரஸ் த‌லைவர் திருமதி சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

டெல்லியில், மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் ச‌ட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை மையமாக வைத்து புயலைக் கிளப்புவது என்றும், ஒரே குரலாக, இரண்டு அவைகளிலும் எதிர்ப்பை காட்ட வேண்டுமென்றும், எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதையடுத்து, ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் தலைவர்களுடன், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்னையில், மத்திய அரசுக்கு எதிராக, அரசியல் ரீதியான நெருக்கடியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00