நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவல் : பறவைக்காய்ச்சல் அச்சம் - கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி
Jan 13 2021 8:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரவத் தொடங்கிய பறவைக்காய்ச்சல், கேரளா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாநில கால்நடைத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்த்து, இதுவரை 11 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது. இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தில் காகங்கள், மைனாக்கள் இறந்து விழுந்ததால், அங்கும் பறவைக்காய்ச்சல் பரவியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், இறந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் பரவல் காரணமாக, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.