பாரத் பயோடெக் நிறுவனம் 16.5 லட்சம் கோவாக்சின் மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் : சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன்
Jan 13 2021 10:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத் பயோடெக் நிறுவனம், 16 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குவதாக சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 55 லட்சம் தடுப்பு மருந்து வாங்கப்படுவதாகவும், அதில் 38 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் மருந்துகள் மட்டும் தலா 295 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்டுவதாகவும் கூறினார். கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளில் ஒன்றை பயனாளிகள் தேர்ந்தெடுக்க முடியாது என்றும் திரு. ராஜேஷ் பூசன் விளக்கம் அளித்தார்.