பொங்கல் பண்டிகை நாட்டின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து
Jan 13 2021 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகாலி பிஹு, உத்தராயண் மற்றும் பாஷ் பர்வா போன்ற பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைத்து குடிமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாக்கள் நம் சமுதாயத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் என திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.