கேரளாவில் 10 மாதங்களுக்குப்பின் திரையரங்குகள் திறப்பு - உற்சாகத்துடன் வருகை தந்த மக்கள்
Jan 13 2021 2:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் சுமார் 10 மாதங்களுக்குப்பிறகு இன்று திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 10 மாதங்களுக்குப்பின் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொச்சி உள்ளிட்ட இடங்களில் பல மாதங்களுக்குப்பின் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். படம் பார்க்க வருவோர் கிருமி நாசினியால் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.