வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவிலிருந்து பூபிந்தர் சிங் விலகல் - மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகுவதாக அறிவிப்பு
Jan 14 2021 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 4 பேர் கொண்ட குழுவிலிருந்து விலகுவதாக, திரு.பூபிந்தர்சிங் மான் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு சமுகத்தீர்வுகாண 4 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம், இதுகுறித்த அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விலகுவதாக, பாரதிய கிஸான் யூனியனின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு.பூபிந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். தானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இக்குழுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.