இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
Jan 23 2021 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு, அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை, பங்களாதேஷ், பிரேசில், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் நன்றி தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்வதாகவும், பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக மாலத்தீவுகள், பூட்டான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கையைத் இந்தியா தொடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.