நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கு - சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Feb 23 2021 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
நேஷனல் ஹெரால்டு வழக்கில் திருமதி சோனியா, திரு. ராகுல் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த, "Associated Journals" என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா மற்றும் அவரது மகன் திரு. ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள 'Young India' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் 50 லட்சம் ரூபாய் கொடுத்து, முறைகேடாக கையகப்படுத்தியதாக, திருமதி சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா உள்ளிட்ட ஏழு பேர் மீது, பா.ஜ.க எம்.பி திரு. சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் திரு.சோனியா, திரு.ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரவும், சாட்சியங்களை முன்வைக்கவும் அனுமதிக்கும்படியும் டெல்லி நீதிமன்றத்தில் திரு. சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த, 11ம் தேதி டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு, நீதிபதி திரு. சுரேஷ் கெய்ட் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக, திருமதி சோனியா, திரு. ராகுல் காந்தி உள்ளிட்டோர், ஏப்ரல் மாதம் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00