70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படும் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

Feb 23 2021 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படும் என மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற வீடியோ கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உள்நாட்டில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து நாடு தன்னிறைவு அடைவதை மத்திய அரசு ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2021-22-ம் நிதியாண்டில் 70 ஆயிரத்து 221 கோடி ரூபாய்க்கு உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றும், பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனவும் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00