உத்தரகாண்ட் பனிச்சரிவு விபத்து - மாயமான 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க மாநில அரசு முடிவு
Feb 23 2021 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்டில் பனிச்சரிவு விபத்தில் மாயமான 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி என்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி பனிப்பாறை பெயர்ந்ததால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தபோவன் பகுதி தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில், அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். வெள்ளப்பெருக்கில் காணாமல் போன 206 பேரில், 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், சில உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன. எஞ்சிய 136 பேர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக 7 ஆண்டுகளுக்கு தகவல் இன்றி இருந்தால் மட்டுமே, இறந்துவிட்டதாக கருதப்படுவது வழக்கம். ஆனால், உத்தரகாண்ட் விபத்தை பொருத்தவரை, அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.