கர்நாடகா கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 6-ஆக உயர்வு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு பிரதமர் மோதி இரங்கல்

Feb 23 2021 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் நடைபெற்ற கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 6-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு பிரதமர் திரு. மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கல்குவாரியில் நேற்று இரவு வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால், வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 6-ஆக அதிகரித்துள்ளது. குவாரியில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய கனிமவளத்துறை அமைச்சர் திரு. முருகேஷ் நிரானி கூறியுள்ளார். இந்நிலையில், குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00