புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படுமென விவசாயிகள் எச்சரிக்கை
Feb 24 2021 8:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 லட்சம் ட்ராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படுமென விவசாயிகள் எச்சரித்துள்ளனர். ராஜஸ்தானின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் திரு.ராகேஷ் திகெய்த், அடுத்தகட்ட போராட்டமாக இந்தியா கேட் அருகிலுள்ள பூங்காக்களை உழுது அங்கு பயிரிடவுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது எனவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் தங்களது நிபந்தனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.