சபரிமலை போராட்டப் பிரச்சினை தொடர்பான வழக்கு விவகாரம் - அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கேரள அரசு முடிவு

Feb 25 2021 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை போராட்டம் பிரச்சினையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, காங்கிரஸ், பா.ஜ.க., இந்து ஐக்கிய வேதி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கேரள போலீசார் ஆர்ப்பாட்டம், கலவரத்தில் ஈடுபட்டதாக ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக்‍ கூட்டத்தில் எடுக்‍கப்பட்ட தீர்மானங்கள் குறித்து முதலமைச்சர் விளக்‍கம் அளித்தார். அதில், சபரிமலை விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட கிரிமினல் அல்லாத அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றும் முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். கேரள அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00