மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் - அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Feb 26 2021 8:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், கேரளாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, 126 தொகுதிகளை கொண்ட, வடகிழக்கு மாநிலமான அசாமில், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் மாதம் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதியும் நடைபெறும் என தெரிவித்தார். அண்டை மாநிலமான கேரளாவில், ஒரே கட்டமாக, 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் திரு. சுனில் அரோரா குறிப்பிட்டார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10-ம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17-ம் தேதியும், ஆறாம் கட்ட வாக்கப்பதிவு ஏப்ரல் 22-ம் தேதியும், ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதியும், கடைசி மற்றும் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.