சுற்றுச்சூழலுக்கும், உளவியலுக்கும் நன்மையளிக்கூடிய பொம்மைகளை உருவாக்க வேண்டும் - இந்திய பொம்மை கண்காட்சி தொடக்க உரையில் பிரதமர் வேண்டுகோள்
Feb 27 2021 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுச்சூழலுக்கும், உளவியலுக்கும் நன்மையளிக்கூடிய பொம்மைகளை உருவாக்க வேண்டும் என பொம்மை தயாரிப்பாளர்களை பிரதமர் திரு. மோதி கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்திய பொம்மைகளின் உலகளாவிய சந்தையை அதிகரிக்கும் நோக்கத்தோடும், தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் 'இந்திய பொம்மை கண்காட்சி 2021' இன்று தொடங்கப்பட்டது. இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை பிரதமர் திரு.மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியர்களின் வாழ்க்கை முறையில் அங்கமாக உள்ள மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றை நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகள் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
பெரும்பாலான இந்திய பொம்மைகள் இயற்கையான, சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுவதாகவும், அதற்கு இயற்கையான, பாதுகாப்பான நிறங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். சுற்றுச்சூழலுக்கும், உளவியலுக்கும் நன்மையளிக்கூடிய பொம்மைகளை உருவாக்க வேண்டும் என பொம்மை தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டார். அதற்கான முயற்சியை எடுப்பீர்களா? என்றும் பிரதமர் திரு. மோடி கேள்வி எழுப்பினார்.