மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடருகே வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் - Jaish - ul Hind பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Feb 28 2021 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்கு, jaish - ul - hind என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான திரு. முகேஷ் அம்பானியின் வீடு, மும்பையில் உள்ளது. அண்மையில் இவரது வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றில், பயங்கர வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து 8 தனிப்படைகள் அமைத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு, jaish ul hind என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து, டெலிகிராம் வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், அம்பானி வீடருகே, வெடி பொருட்களுடன் கா‌ரை நிறுத்திய நபர், பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாகவும், இது வெறும் தொடக்கம் தான் - இனிமேல் தான் பல சம்பவங்களை காணப் போகிறீர்கள் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00