இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் படிக்க வேண்டும் - மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பேச்சு
Feb 28 2021 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசிஞாயிறு என்பதால், மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோதி, கோடை நெருங்குவதால் மக்கள், மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் அதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் திரு. மோதி, உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி தமிழ் என்றும், தமிழ் மொழியை தன்னால் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.