மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்‍கு விதிக்‍கப்பட்ட மரண தண்டனை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் - விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலேயே கூலித்தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் வேதனை

Feb 28 2021 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாண் சட்டங்களால், விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களிலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும் டெல்லி வன்முறைக்கு பா.ஜ.கதான் காரணம் என்றும் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத்தில், டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விவமாகவும் அவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தூக்கு தண்டனை போன்றது என்றும், அச்சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி 4 பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கவே மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். இச்சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்திலேயே கூலித்தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் என்றும், அதனால்தான் இப்போராட்டம் அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். பிரிட்டிஷ்காரர்கள் கூட நம் விவசாயிகள் மீது இந்த அளவுக்கு அடக்குமுறைகளை ஏவவில்லை என்றும் தெரிவித்தார். குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறை முழுவதும் பாஜக அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்றும், அங்கு கொடியேற்றிவர்கள் பாஜக தொண்டர்கள்தான் என்றும் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00