டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி - கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள்

Mar 1 2021 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று இந்நிகழ்வையொட்டி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் நிலையில், தற்போது விருப்பமுள்ள பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கோவேக்ஸின் தடுப்பூசி முதல் டோஸை இன்று போட்டுக்கொண்டார். பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், தடுப்பூசி போட்டு கொள்வதற்கான தகுதியுள்ள அனைவரும் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00