Fastag முறையால் ஆண்டுக்‍கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு எரிபொருள் செலவு மிச்சமாகும் - மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

Mar 2 2021 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
Fastag முறையால் ஆண்டுக்‍கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் நடைமுறை கடந்த 15-ம் தேதி அமலுக்‍கு வந்தது. ஃபாஸ்டேக் இல்லாதவர்களிடம் அபராதமாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ஃபாஸ்டேக் கட்டண நடைமுறை கட்டாயமாக்கப்படிருப்பதன் மூலம், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்‍கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், ஆண்டுக்‍கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்‍கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவித்தார். ஃபாஸ்டேக் தினசரி வசூல் 104 கோடி ரூபாயை எட்டியிருப்பதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00