பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கேரளாவில் 12 மணிநேர வேலைநிறுத்தம் - போக்குவரத்து சங்கங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் களமிறங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Mar 2 2021 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கேரளாவில், போக்குவரத்து சங்கங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சார்பில், இன்று 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தைக் கருத்தில்கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், கண்மூடித்தனமாக பெட்ரோல், டீசலுக்கான விலையை உயர்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.