மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் - ஐ.எஸ்.எஃப். கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு மூத்த தலைவர் அனந்த் ஷர்மா கடும் எதிர்ப்பு

Mar 2 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், ஐ.எஸ்.எஃப்., எனப்படும் இந்தியன் செக்குலர் ஃபிரன்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு, அக்கட்சி மூத்த தலைவர் திரு. அனந்த் சர்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, மொத்தமுள்ள 294 தொகுதிகளில், காங்கிரசுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியன் செக்குலர் ஃபிரன்ட் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளதாக, அக்கட்சியின் மேற்கு வங்க தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு. அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. அனந்த் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காந்தி மற்றும் நேருவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக, ஐ.எஸ்.எஃப்., உடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் திரு. அதிர் ரஞ்சன் சவுத்ரி, எந்த காரணமும் இல்லாமல், கா‍ங்கிரசுக்கெதிராக அனந்த் சர்மா அதிகம் குரல் கொடு‌த்து வருவதாக குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில், 38 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரசில் கூட்டணி தொடர்பாக வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படு‌த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00