மும்பை மின்தடைக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல : மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்

Mar 2 2021 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பையில் கடந்தாண்டு ஏற்பட்ட மின்தடைக்கு சைபர் தாக்கு‌தல் காரணமல்ல என மத்திய மின் துறை அமைச்சர் திரு.ஆர்.‍கே.சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், கடந்தாண்டு அக்‍‌டோபர் மாதம் மிகப்பெரிய அளவில் மின் தடை ஏற்பட்டது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட மின்தடையால், மருத்துவமனைகள், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு மும்பை நகரமே ஸ்தம்பித்தது. இந்த சதி வேலையை, சீனாவைச் சேர்ந்த எக்கோ என்ற அமைப்பு செய்திருக்கலாம் என்றும், இந்திய மின் தொகுப்பில் தீங்கான மென்பொருளை செலுத்தியதால் மும்பையில் மின்த‌டை ஏற்பட்டது என்றும், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங், மும்பை மின் தடை குறித்து இரண்டு கமிட்டிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளதாகவும், அதில், மும்பை மின்தடைக்கு மனித தவறே காரணம் - சைபர் தாக்குதல் காரணமல்ல என்றும், இரண்டாவது கமிட்டியின் அறிக்கையில், சைபர் தாக்குதல் நடைபெற்றதாகவும், ஆனால் அதற்கும் மும்பை மின்தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00