பணியில் அலட்சியமாக இருந்தால் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்கை

Mar 4 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் பார்வையாளர்கள் அலட்சியமாக பணியாற்றினால் இரக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்‍க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, தேர்தல்களில் தேர்தல் பார்வையாளர்கள் மிக முக்கியமானவர்கள் என்றும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க பார்வையாளர்கள் உதவ வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு செய்யப்பட்ட வசதிகளை சரிபார்க்க பார்வையாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேர்தல் பார்வையாளர்கள் தங்களது பணிகளில் அலட்சியமாக இருந்தால் தேர்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது என்றும், அவர்கள் மீது இரக்கமின்றி உடனடி நடவடிக்கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00