மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்

Mar 7 2021 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 711 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதாகவும், 100 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், 84 புள்ளி 7 சதவீத பாதிப்புகள் மகாராஷ்ட்ரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டி பதிவாகிறது. பெருந்தொற்று குறித்த அச்சமில்லாமல் பொதுமக்கள் கூடுவதே, மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவலுக்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00