புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் 81 புள்ளி ஏழு சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அதிகரிப்பு
Apr 7 2021 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் 81 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 91 புள்ளி இரண்டு எட்டு சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக ராஜ்பவன் தொகுதியில் 72 புள்ளி 7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தலைவிட இம்முறை 2 புள்ளி மூன்று நான்கு சதவீத வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன.
இதனிடையே, புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்து சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.