பாஜக ஆளாத மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு : தங்கள் தோல்வியை மறைக்க மாநிலங்கள் பொய் கூறுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சனம்

Apr 8 2021 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கொரோனோ தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், பாஜக ஆளாத மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

இந்தியாவில் கொரொனா பரவல் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வாரத்துக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் மூன்று தினங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ஒடிசா அரசு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 700 தடுப்பூசி மையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் 5 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவை 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் உடனடியாக 25 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளன.

மாநிலங்களின் இந்த புகாருக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் எங்கும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும் எதிர்கட்சியினர் ஆளும் சில மாநிலங்களில் அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00