இந்தியா - சீனா இடையே நீடிக்கும் லடாக் எல்லை விவகாரம் - நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை

Apr 8 2021 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகளும் அங்கு தங்களது படைகளை குவித்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்‍கவும், படைகளை வாபஸ் பெறவும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இதுவரை 10 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. 10-வது சுற்று பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் படைகளை திரும்பப்பெற்றன.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டாரில் இந்திய பகுதிக்குள் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பிரச்னைகள் மற்றும் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களில் இருந்து படைகளை விலக்குவது குறித்தும் ஆலோசிக்‍கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00