மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு - புனே சட்டாரா உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்

Apr 8 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புனே சட்டாரா உள்ளிட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடமிருந்தும், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோ டெக் நிறுவனத்திடமிருந்தும் வாங்கி, மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில், புனே, சட்டாரா, Panvel ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புனேவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில், தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. திருமதி.சுப்ரியா சுலே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பல்வேறு மையங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், தடுப்பூசிகளை விரைந்து அனுப்பி வைக்குமாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தனிடனம் வலியுறுத்தியுள்ளதாகவும், மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00