பிரதமருக்கு தடுப்பூசி போட்டது மறக்க முடியாத அனுபவம் : தடுப்பூசி போட்ட செவிலியர்கள் நிஷா சர்மா, நிவேதா மகிழ்ச்சி

Apr 8 2021 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது, தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என செவிலியர்களான நிஷா சர்மா, நிவேதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்த நிஷா, அவருக்கு தாம் தான் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது காலையில் தான் தெரிந்ததாக கூறினார். பரிவுடன் தன்னிடம் பேசிய பிரதமர், தமது சொந்த ஊர் பற்றி கேட்டறிந்து கொண்டதாக கூறினார். பின்னர் பிரதமருடன் தாங்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

இதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா தெரிவித்தபோது, பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் செவிலியர் நிஷா சர்மாவுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளார். பிரதமருக்கு முதல் தவணை தடுப்பூசியை தாம்தான் போட்டதாக கூறிய நிவேதா, இரண்டாவது முறை பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட்டார். தங்களுடன் மிகவும் சாதாரணமாக பிரதமர் பேசி கொண்டிருந்ததாக செவிலியர் நிவேதா கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00