டெல்லியில் 5 நாட்கள் வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் தகவல்

Apr 8 2021 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் இன்னும் 5 நாட்கள் வரை மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சத்யேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. டெல்லியில் போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் குற்றம் சாட்டியதற்கு பதிலளித்துள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திரு.சத்யேந்தர் ஜெய்ன், டெல்லி முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் சீராக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து மேலும் தடுப்பூசிகளை கோரியுள்ளதாகவும், திரு.சத்யேந்தர் ஜெய்ன் தெரிவித்துள்ளார். டெல்லி அரசை குற்றம் சாட்டுவதை விடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், திரு.சத்யேந்தர் ஜெய்ன் கேட்டு கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00