ஒடிசா முழுவதும் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படும் அபாயம் - சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் பேட்டி

Apr 8 2021 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு அடுத்த இரு தினங்களுக்குள் போதிய கொரோனா தடுப்பூசிகளை அனுப்பாவிட்டால், ஒடிசா மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக, அம்மாநில மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.நபா கிஷோர் தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் குற்றம் சாட்டினார். இந்த சூழலில் பல்வேறு மாநில அரசுகள், கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஒடிசாவில் நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும், தற்போது 5 லட்சத்து 34 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.நபா கிஷோர் தாஸ் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகளை இரு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால், மத்திய அரசிடம் குறைந்தபட்சம் 25 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளதாகவும், திரு.நபா கிஷோர் தாஸ் தெரிவித்துள்ளார். போதிய தடுப்பூசிகள் இல்லாததால், மாநிலம் முழுவதிலுமுள்ள ஆயிரத்து 400 தடுப்பூசி மையங்களில், ஏற்கனவே 700 மையங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், இன்னும் இரு தினங்களுக்குள் மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்காவிட்டால், ஒடிசா மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும், திரு.நபா கிஷோர் தாஸ் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00