மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் மறுப்பு

Apr 8 2021 7:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் திரு. அனில் தேஷ்முக் மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் ‍உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரும்படி, மஹாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவா‌த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. அனில் தேஷ்முக் வற்புறுத்தியதாக, மும்பை முன்னாள் காவல் ஆணையர் திரு. பரம் பிர் சிங் குற்றம் சாட்டினார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை திரு. அனில் தேஷ்முக் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து, திரு. அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்கக்‍கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. பரம் பிர் சிங் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மஹாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியை திரு. அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்தததாக அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்கிய மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திரு. அனில் தேஷ்முக் மற்றும் மஹாராஷ்டிர அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் தேஷ்முக்கிற்கு வலது ‌கையாக இருந்த ஒருவரே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது, மிகப்பெரிய பிரச்னை என்றும், இதில் இருவர் மீதும் கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் - எனவே, மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட‌்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00