மகாராஷ்ட்ர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்‍கு - கரையோரங்களில் வசிக்‍கும் கிராம மக்‍களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்‍குழுவினர் தீவிரம்

Jul 25 2021 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கமகளூரு, ஷிவமோகா, பெலகாவி, உடுப்பி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதனிடையே, பலத்த மழையால் பல ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மகாராஷ்டிராவின் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் கனமழையால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. Sangli மாவட்டத்தில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ராய்கட், மகாத் உள்பட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00