ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Sep 18 2021 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார்.

45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு 30-ம் தேதி வரை ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், ஜி.எஸ்.டி. போர்ட்டலில் தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்றுமதியாளர்கள் ஐடிசி வரியை திரும்பப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும் விளக்கினார். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய திருமதி. நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00