குவாட் மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டம்

Sep 22 2021 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக இன்று அமெரிக்‍கா புறப்பட்டு சென்றார்.

கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் திரு.மோடி, 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டார். அவரின் பயண திட்டத்தின்படி, அமெரிக்‍காவின் முக்‍கிய தொழிலதிபர்களுடன் நாளை காலை ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கையும் அவர் தனியே சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் பிரதமர் திரு. மோடி சந்திக்‍கிறார்.

நாளை மறுதினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்‍கும் பிரதமர் திரு. மோடி, ஆப்கன் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேசவுள்ளார். அதன்பின்னர், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், அமெரிக்‍கா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். வரும் 25-ம் தேதி நியூயார்க்கில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் திரு. மோடி, பின்னர் இந்தியா திரும்புகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00