தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் பெண்களை பாதுகாப்பு படைகளில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

Sep 22 2021 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் பெண்களை பாதுகாப்பு படைகளில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்‍கு உச்சநீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத்தேர்வை எழுத பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்விலேயே அனுமதிக்‍க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, நுழைவுத்தேர்வு எழுத பெண்களையும் அனுமதிக்‍க ஒப்புக்‍கொண்ட மத்திய அரசு, அடுத்த ஆண்டு மே மாத தேர்வில் பெண்களை சேர்த்துக் ‍கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இன்று ஆட்சேபம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வில் இந்த ஆண்டே பெண்களை அனுமதிக்‍க வேண்டும் என்றுதான்‍ உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அடுத்த ஆண்டு மே மாதம் தேர்வு எழுத அனுமதிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அகாடமி நுழைவுத் தேர்விலேயே பெண்களை அனுமதிக்‍க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00