இந்தியாவில் சாதிவாரி கணக்‍கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் வலியுறுத்தல் - சாதி அடிப்படையில் இட ஒதுக்‍கீட்டை அதிகரிக்‍க முடியும் என்றும் கருத்து

Sep 23 2021 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் சாதிவாரி கணக்‍கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ப இட ஒதுக்‍கீட்டை அதிகரிக்‍கலாம் என்றும், பீகார் முன்னாள் முதலமைச்சர் திரு. லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய திரு. லாலு பிரசாத் யாதவ், சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை தான்தான் முதலில் எழுப்பியதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து ஏற்கனவே தான் வலியுறுத்தியதாகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனுக்காகவே கோரிக்கை வைத்ததாகவும் கூறினார். சுதந்திரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தற்போதைய இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இப்போதுள்ள மக்‍கள் தொகைக்கு இது ஏற்புடையதாக இல்லை என்றும் தெரிவித்தார். எனவே, புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற வேண்டும் என்றும் திரு. லாலு பிரசாத் யாதவ் கூறினார். அதற்கு தற்போதைய 50 சதவீத அதிகபட்ச இடஒதுக்கீடு தடையாக இருக்குமானால், அதையும் உடைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00