பெகாசஸ் ஒட்டுக்‍கேட்பு விவகாரத்தில் விசாரணைக்கான நிபுணர் குழு அடுத்த வாரம் அமைக்‍கப்படும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தகவல்

Sep 23 2021 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெகாசஸ் ஒட்டுக்‍கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர் குழு அடுத்த வாரம் அமைக்‍கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்‍கேட்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த மனுக்‍கள் மீது அடுத்த வாரம் இடைக்‍கால உத்தரவு பிறப்பிக்‍கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மற்றொரு வழக்‍கின் விசாரணையின்போது இதனை தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. என்.வி.ரமணா, பெகாசஸ் ஒட்டுக்‍கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த அடுத்த வாரம் நிபுணர் குழு அமைக்‍கப்படும் எனக்‍ கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00