குஜராத்தில் அதானியின் துறைமுகத்தில் போதை பொருள் சிக்கிய விவகாரம் - விசாரணையை தொடங்கியது அமலாக்‍கத்துறை

Sep 23 2021 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத்தில் அதானி குழுமத்திற்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்‍கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

அஃப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத்துக்‍கு 2 சரக்‍கு பெட்டகங்களில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக ஆப்கன் நாட்டவர் 4 பேரும், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரும், இந்தியர்கள் மூவரும் என இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பிடிபட்டதையடுத்து டெல்லி, நொய்டா, சென்னை, கோவை, அகமதாபாத், மாண்ட்வி, காந்திதாம், விஜயவாடா ஆகிய இடங்களில் வருவாய் புலனாய்வு இயக்‍க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மேலும் 37 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் பணமோசடி நடைபெற்றதா என்கிற கோணத்தில் அமலாக்‍கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00