கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் - கொரோனா இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஒப்புதல்

Sep 23 2021 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு இழப்பீட்டுத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்தது. இத்தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து மாநிலங்கள் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்‍கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு வழக்‍கறிஞர் தெரிவித்தார். மாநில அரசுகள், இந்த நிதியை பேரிடர் நிதியிலிருந்து வழங்க வேண்டும் - இறப்பு சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டது. ஏற்கனவே இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தால் அதனை உரிய ஆதாரங்களுடன் மாற்றிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாநில அரசுகள், மாவட்ட அளவிலான குழுவை அமைக்க வேண்டும் - மாவட்ட கூடுதல் ஆட்சியர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00