காற்று மாசுபாட்டால் ஆண்டுக்‍கு சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பு - காற்று மாசுபாட்டைக்‍ குறைக்‍க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்‍கை

Sep 23 2021 9:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
காற்று மாசுபாடு காரணமாக, நோய்த் தாக்‍குதலுக்‍கு ஆளாகி, ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்பார்த்ததை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக உள்ளதாக எச்சரிக்‍கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது - உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, டெல்லியில் 17 மடங்கும், மும்பையில் 8 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும், சென்னையில் 5 மடங்கும், காற்று மாசு அளவு உயர்ந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்‍கக்‍கூடிய புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு நிகராக, காற்றின் மாசுபாடும் அச்சுறுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதய நோய்க்‍கு முக்‍கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளதாகவும், குழந்தைகள் மத்தியில், நுரையீரலின் வளர்ச்சியைக் குறைத்து ஆஸ்துமாவை அதிகப்படுத்தும் அளவிற்கு இன்னல்களை ஏற்படுத்தக்‍ கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நச்சுக் காற்றின் உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும் - அதனால் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, - காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர், தாங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00