பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வருமான வரம்பு சர்ச்சை -- 2 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Oct 21 2021 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது தொடர்பாக 2 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க, வருமான வரம்பு நிர்ணயிக்‍கப்பட்டது தொடர்பான வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது மத்திய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. எந்த ஆய்வின் அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது? பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? சொத்துகளை கணக்கில் கொள்ளாமல் வருமானத்தை மட்டும் கணக்கிடுவது எப்படி சரியாகும்? என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இது குறித்து பிரமாணப்பத்திரம் தாக்‍கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வழங்கியும், இதுவரை பிரமாணப்பத்திரம் தாக்‍கல் செய்யாதது ஏன்? என்றும், இது போன்ற முக்கியமான வழக்குகளில் பிரமாண பத்திரம் விரைந்து தாக்கல் செய்ய வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பினர். 2 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00