சாலைகளை மறித்துப் போராட யாருக்‍கும் உரிமையில்லை -- விவசாயிகள் போராட்டம் ​தொடர்பான வழக்‍கில் உச்சநீதிமன்றம் அதிரடி

Oct 21 2021 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆனால் சாலைகளை மறிக்க யாருக்‍கும் உரிமை இல்லை எனக்‍ கூறியுள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இவ்வழக்‍கில், விவசாயிகள் நிரந்தரமாக சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதித்துறை, நாடாளுமன்ற விவாதங்கள் உள்ளிட்டவை வாயிலாகவே பிரச்னைகளுக்‍கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, சட்டம் மிகத் தெளிவாக உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அனைவருக்‍கும் போராட உரிமை உண்டு என்றும், ஆனால் சாலைகளை மறிக்க யாருக்‍கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த விவசாயிகள் தரப்பினர், தாங்கள் சாலைகளை மறிக்‍கவில்லை என்றும், போலீசாரே சாலைகளை அடைத்துள்ளனர் என்றும் கூறினர். இதையடுத்து வழக்‍கின் விசாரணை வரும் டிசம்பர் 7-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00